Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

புகையிலை, மது விற்ற இரு நபர்கள் சிக்கினர்

போடி, செப். 7: போடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பதுக்கல் மது ஆகியவற்றை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ மணிகண்டன், போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது போடி கீழத்தெருவில், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (46) அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1.250 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக போடி, கீழத்தெரு பகுதியில் ரோந்துப்பணிகளை மேற்கொண்டபோது, கீழத்தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி (52) என்பவர், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனர்.