போடி, ஆக. 5: போடியில் பொது இடத்தில் போலீஸ் ஏட்டுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது ெசய்யப்பட்டார். போடி நகர் காவல் நிலைய ஏட்டு மாரிச்சாமி, நேற்று தனது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போடியைச் சேர்ந்த சதாம்உசேன் (36) என்பவர், குடிபோதையில் நடுரோட்டில் நின்று ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப்பார்த்த ஏட்டு மாரிச்சாமி அவரை கண்டித்துள்ளார். மேலும் மது போதையில் இருந்த அவர் டூவீலர் ஓட்டிக்கொண்டு செல்ல முயன்றதையும் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதாம் உசேன், அவரை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார். இந்த அத்துமீறல் குறித்து மாரிச்சாமி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் ேபரில் எஸ்ஐ குருகவுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், சதாம் உசேனை கைது ெசய்தார். பின்னர் போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவின்படி விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.


