தேவதானப்பட்டி, ஆக. 5: தேவதானப்பட்டி அருகே வீட்டில் தீப்பற்றியதால் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சொக்கர். இவரது மனைவி பாண்டியம்மாள்(59). இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மகன் மற்றும் மகள் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்படி யாரும் இல்லாத நேரத்தில் இவர்களின் வீட்டிற்குள் திடீரென தீப்பற்றி உள்ளது.
இந்த தீ வேகமாக பரவிய நிலையில், அருகில் வசிப்போர் தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். இதற்கிடையே தகவல் அறிந்து வேலைக்கு சென்றிருந்த பாண்டியம்மாள்திரும்பி வந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ெராக்கப் பணம், மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது. இது குறித்து பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.


