தேவதானப்பட்டி, செப்.5: தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டியில் உள்ள முனையடுவநாயனார் கோயிலில் மாதக் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உள்ள முருகனுக்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் விநாயகர், முருகன், அதிகார நந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவனடியார்களால் திருமுறை பதிகம் பாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
+
Advertisement


