Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மலைச்சாலையில் மரம் முறிந்து விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், செப். 5: கொடைக்கானல் மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலை பகுதியான செண்பகனூர் அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் பின்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக காருக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் கார் மீது விழுந்ததுடன் சாலையின் குறுக்கேயும் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி சுமார் 1 மணிநேரத்திற்கு பின் போக்குவரத்தை சரிசெய்தனர். எனவே வனத்துறையினர் மழைக்காலம் துவங்கும் முன்பு சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.