Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இன்றும், நாளையும் வீடு தேடி வருகிறது ரேஷன் பொருட்கள்

தேனி, ஆக. 4: தேனி மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் மாதத்திற்குரிய குடிமைப்பொருள்கள் இன்று (ஆக. 4) மற்றும் நாளை வாகனம் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த நாட்களில் பயனாளிகள் அவர்களின் இல்லங்களிலேயே குடிமைப்பொருட்கள் பெற்றுக்கொண்டு பயனடையலாம் என, கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.