Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடுக்கி மாவட்டத்தில் பூத்துக் குலுங்கும் காபி செடிகள் விவசாயிகள் மகிழ்ச்சி

மூணாறு, மார்ச் 3: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக, நறுமணப் பயிர்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. இங்குள்ள மலைக்கிராமங்களில் ஏலம், குறுமிளகு, கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றுடன் காபியும் மிக முக்கியப் பயிராகப் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் இல்லை. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இதனை தொடர்ந்து தற்போது காபி தோட்டங்களில் செடிகள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, ஆனச்சால்-ராஜாக்காடு சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் சாலையோரங்களில் காபி செடிகள் வெண்மை நிறப் பூக்களுடன் காணப்படுகின்றன. மழையினால் எழுந்த மண் வாசனையுடன், காபி பூக்களின் நறுமணமும் சேர்ந்து அப்பகுதி வழியாக செல்வோரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. காபி செடி குறைந்தது 40 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மகசூல் தரக்கூடியது. ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் முதல் ஜனவரி வரை மட்டுமே அறுவடை நடைபெறும். தற்போது பூக்கள் அதிகளவில் பூத்திருப்பது, வரப்போகும் சீசனில் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளிடம் ஏற்படுத்தியுள்ளது