Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 3: தேனியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தேனியில் என்ஆர்டி சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, முதலாவது மற்றும் 2வது கிளாஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.