Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 வாலிபர்கள் கைது

கூடலூர், அக். 2: டூவீலர்களில் கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் டான்சாப் தனிப்படை போலீசார் மற்றும் அடிமாலி போலீசார் ‘ஆபரேஷன் தூஃபான்’ சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த ராஜாக்காடு பழையவிடுதி பகுதியைச் சேர்ந்த வெட்டுக்கல்லுக்காடு அபின் (25), களப்புரக்கல் ராகுல் (19), உடும்பனாட்டு அனந்து (23), முக்குடித்தரையில் அஸ்வின் (24), எர்ணாகுளம் மாவட்டம் முளந்துருத்தி மூரிப்பறம்பில் அஸ்வின் பிஜூ (24) ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் இவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 3 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.