ஆண்டிப்பட்டி, அக். 2: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் பஞ்சாயத்து சூர்யநல்லியைச் சேர்ந்தவர் பொன்னுகுமார். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மாணிக்க லட்சுமி(65). கடந்த 29ந் தேதி இவர், தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆண்டிபட்டி அடுத்துள்ள சக்கம்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் எதிரே வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சாலையைக் கடந்து வாகனத்திற்கு செல்ல குடும்பத்தினர் முயன்றனர். அப்போது ஆண்டிபட்டி-தேனி மெயின் ரோட்டில் வடபுதுப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார்(26) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, சாலையைக் கடக்க முயன்ற மாணிக்கலட்சுமி மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


