Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிறைக்கு கொண்டு செல்லும்போது போலீசாரிடம் இருந்து தப்பிய கைதி சிக்கினார்

வருசநாடு, ஆக.1: சிறைக்கு கொண்டு செல்லும்போது, போலீசாரிடம் இருந்து தப்பிய கைதி சிக்கினார்.

பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (23). இவரை, குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் க.விலக்கு அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிய கணேசன் தலைமறைவானார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், பெரியகுளம் அருகே, சோத்துப்பாறை அணைப் பகுதியில் கணேசன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கண்டமனூர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.