Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெண் குழந்தைக்கு உரிமைக்கோருபவர் தகவல் கூறலாம்

ஈரோடு, ஜன.24: ஈரோடு ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு, உரிமை கோருபவர்கள் அதற்கான ஆவணங்களுடன், அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : கடந்த 20.02.2023 அன்று, செங்கோட்டை ரயிலில் திருநெல்வேலி வழியாக, ஈரோடு வரை பயணம் செய்த ஒருவர் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண் குழந்தையை எடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் முறையற்ற முறையில் வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பாக, குழந்தை கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 19.08.2024 அன்று, குழந்தை மீட்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் குழந்தைகள் நலக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

எனவே, இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை கோருபவர்கள் அதற்கான ஆவணங்களுடன் இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு இல்லாத போது இந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பெற்றோர் இல்லை எனக்கருதி, தத்தெடுத்தல் ஒழுங்குமுறை விதிகள் 2022ன் படி தத்து வழங்கும் முறை மேற்கொள்ளப்படும். குழந்தையின் தற்போதைய வயது 1 வருடம் 6 மாதங்களாகும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.