பேராவூரணி, அக். 30: பேராவூரணி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. பேராவூரணி அரசு மருத்துவமனை பகுதியில் சுகாதாரம் பேண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வளாகம் முழுவதும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு டாக்டர் அறிவழகன் தலைமை வகித்தார்.நேதாஜி மருதையார் சமூக கல்வி அறக்கட்டளை நிறுவனரும், சமூக ஆர்வலருமான நேதாஜி தெட்சணாமூர்த்தி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் சினேகா, தலைமை நர்ஸ் சித்ரா, சமூக ஆர்வலர்கள் நடராஜன் , அப்துல்கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


