பேராவூரணி, அக்.30: சட்டமன்றத் தொகுதி லட்சிய ஜனநாயகக் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வசந்தகுமார், தொகுதிச் செயலாளர் சேரலாதன், தொகுதி வர்த்தகர் அணிச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேராவூரணி தொகுதியில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, ஊராட்சிகள்தோறும் கிளை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் நீலகண்டன், தொகுதி கலை இலக்கிய அணிச் செயலாளர் திலீப்குமார், மாவட்ட நிர்வாகி ஆனந்தன், மாவட்ட விளையாட்டு அணி துணைச் செயலாளர் அருள்குமார், மாவட்ட வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அருள்முருகன், பேராவூரணி நகரச் செயலாளர் சிவகுமார், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் நகரச் செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.


