தஞ்சாவூர், அக். 30: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தஞ்சையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விலைவாசி உயர்வுக்கு எதிராக பண்டிகை பஜார் என்ற நூதன போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் சரிதா, மாவட்டப் பொருளாளர் மேரி, தஞ்சை மாநகரச் செயலாளர் புனிதா, அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஜோஸ்பின் மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் சிந்து பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், பால், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்துநூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


