தஞ்சாவூர், அக். 29: கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் கிராமத்தில் கால்நடைக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் அறிவுறுத்தலின் படி முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன்னிலையில் கால்நடை மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி தலைமையில் உதவி மருத்துவர்கள் சங்கமித்ரா,
ஜனனி கால்நடை பாராமரிப்பு உதவியாளர்கள் மகேஷ் பன்னீர்செல்வம் ஆகியோர் கால்நடைக்களுக்கு தடுப்பூசி, குடர்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி கால்நடை வளர்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார். மிஷன் ரேபிஸ் கல்வி அலுவலர் ரேபிஸ் நோய் பற்றி விளக்கி கூறினார். முகாமில் சிறந்த கன்றுக்கான பரிசு மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.


