திருவையாறு, அக். 29:திருவையாறு அருகே வளப்பக்குடி முனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி இவரது மகன் சூர்யா (27)நேற்று முன் தினம் இரவு தனது வீட்டருகில் வசித்து வரும் இரண்டு பேருடன் மது அருந்திய போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக நேற்று நடுக்காவேரி போலீசில் சூர்யா புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று இரவு சூர்யா மேலதிருப்பூந்துருத்தியில் உள்ள ஜியோ செல்போன் டவர் மீது குடிபோதையில் ஏறி தன்னிடம் தகராறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து போலீசார் திருவையாறு தீயணைப்பு மீட்ப படையினருக்கு ததவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் தேவேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுரேஷ், யோகேஷ், மணிகண்டன் ஆகியோர் அவரை பத்திரமாக மீட்டு முதலுதவிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


