Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு தஞ்சையில் இருந்து 2500 டன் அரிசி மூட்டை

தஞ்சாவூர், அக். 29: தஞ்சையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடிக்கு 2500 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி, நேற்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 1250 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக தலா 21 வேகங்களில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.