திருவையாறு, ஆக.29: திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருவையாறு மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணைமின் நிலையங்களில் இன்று (29.8.2026) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி,
ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர்...கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



