பேராவூரணி, ஆக.29: பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில், செவ்வியல் இசை பிரிவில் மாணவி பவதாரணி இரண்டாமிடமும், குழு நாடகம் பிரிவில் மாணவிகள் சிவானி, யுவஸ்ரீ, தமிழருவி, நிகிதா, ரூபிகா ஆகியோர் இரண்டாமிடமும், வில்லுப்பாட்டு பிரிவில் மாணவர் முகம்மது அப்ராஸ், மணிமாறன், தர்ஷன், சுதர்சன், கிஷோர் ஆகியோர் இரண்டாமிடமும், நாட்டுப்புற பாடல் பிரிவில் முகம்மது அப்ராஸ் மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
+
Advertisement



