ஒரத்தநாடு, ஆக. 28: ஒருத்தநாடு சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட நெம்மேலி திப்பியகுடி கிராமத்தில் பட்டியலின மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
விபத்து உள்ளிட்ட உயிரிழப்பு ஏற்பட்டால் சடலங்களை கொண்டு சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் பாசன ஆற்றுக்குள் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லவேண்டிய அவல நிலை உள்ளது. மழைக்காலம் வந்தால் சேறு சகதியுடன் சடலத்தை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.


