ஒரத்தநாடு, ஆக. 28: ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா உட்பட்ட குளம், ஏரிகள் தூர்வாரும் பணிகளுக்கு அனுமதி வழங்கிவருகின்றனர். இதனால் பல்வேறு முறைகேடுகளும் லஞ்சமும் வழங்கப்பட்டு வருவதாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத் பத்மாவதி, சரவணன், ஆகியோர் கொண்ட அதிகாரிகளின் தலைமையில் நேற்று மதியம் 3 மணியிலிருந்து சுமார் 5 மணி நேரமாக ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் பணம் ஏதும் சிக்கவில்லை. இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை கண்டதும் பதறி அடித்துக் கொண்டு தப்பி ஓடியதால் ஆவணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தரப்பில் சென்றனர்.



