தஞ்சாவூர், ஆக.28: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி, திருப்பூர், பட்டுக்கோட்டை ,பேராவூரணி. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மன்னார்குடி, சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செல்லக்கூடிய பயணிகள் இரவு பகல் முழுவதும் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கழிவறை பின்புறம் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மேலும் அந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை. மேலும் கழிவறைக்கு பின்புறம் இரவு நேரங்களில் பெண்கள் அமர்ந்து கொண்டு தனியாக ஆண்களை குறி வைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



