தஞ்சாவூர், அக். 23: பூதலூர் அருகே நாச்சியார்பட்டி பகுதியில் உள்ள சாலை தார் சாலையாக மாற்றாமல் செம்மண் மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நாச்சியார் பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். அந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அந்த சாலை முழுவதும் சேரும் சக அதிகமாக காணப்படுகிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


