பேராவூரணி. அக். 23: பேராவூரணி அருகேயுள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான பாரா தடகளப் போட்டியில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பாரா தடகளப் போட்டி கடந்த வாரம் செங்கல்பட்டில் நடைபெற்றது. போட்டியில் கொன்றைக்காடு அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி சத்யா 100 மீட்டர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி மற்றும் வழி நடத்திய உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் (பொ) மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.


