தஞ்சாவூர், அக். 23: தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. முருகேசன் தலைமை வகித்தார். ரமேஷ்குமார், நேரு, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு முழுவதும் பெருவாரியாக வாழ்ந்து வரும் வேளாண் குடி சமூகமான தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து மாற்றம் செய்து ஏற்கனவே இருந்த பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடம்பெற செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி ஸ்ரீ இந்திரன் சிலையை மீண்டும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நிறுவ வேண்டும். கடந்த கால ஆட்சியில் அரசு அறிவித்தபடி சோழ மன்னன் ராஜராஜனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


