தஞ்சாவூர், செப்.18: தஞ்சையில் 4 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய பிரகாஷ் பாபநாசம் தாசில்தார் ஆகவும், திருவையாறு தனி வட்டாட்சியராக பணியாற்றிய மதுசூதனன் திருவிடைமருதூர் வட்டாட்சியர் ஆகவும், பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக தனி வட்டாட்சியராகவும், கும்பகோணம் முன்னாள் கலால் மேற்பார்வை அலுவலர் ரவிச்சந்திரன் திருவையாறு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement


