Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சுவாமிமலை சர்வசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

கும்பகோணம், மே 18: சுவாமிமலை சர்வசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. கும்பகோணம் அருகே சுவாமிமலை, இராஜவீதி, மாரியம்மன் கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள சர்வசக்தி மாரியம்மனுக்கு 68ம் ஆண்டு பால்குட கோடாபிஷேகம் மற்றும் காளியம்மன் திருநடன உற்சவ திருவிழா கடந்த 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 13ம் தேதி காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான பால்குட கோடாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை காவிரி கரையிலிருந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோடாபிஷேகம், கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு தங்க சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவேந்திரராஜா, அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சங்கர், ராதிகாகுமாரி மற்றும் இராஜவீதி, மாரியம்மன் கோயில் தெருவாசிகள் செய்திருந்தனர்.