தஞ்சை, அக்.17: தஞ்சை பனகல் கட்டிடம் அருகே தெற்கு மாவட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் அண்ணாசாமி வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் கருப்பசாமி, வட்ட தலைவர்கள் சத்தியசீலன், சண்முகம், கருணாகரன், சரவண பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையில் பதவி உயர்வின்போது முறையான ஊதிய நிர்ணயத்தை செய்ய வேண்டும். இதர துறைகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


