Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தஞ்சை விளார்சாலை குறுக்கே செல்லும் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகள் தூர்வாரும் பணி

தஞ்சாவூர், அக்.17: தஞ்சாவூரில் நீண்ட காலமாக குப்பை தேங்கியிருந்த மழைநீர் வடிகாலில் மாநகராட்சி மூலம் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சியின் இறுதிப் பகுதியான விளார் ஊராட்சி தொடங்கும் இடத்தில், சாலை குறுக்கே மழைநீர் வடிகால் உள்ளது. பல ஆண்டுகளாக இதில் குப்பை தேங்கி மழைநீர் எளிதில் செல்ல முடியாமல் இருந்ததுடன், துர்நாற்றமும் வீசியது.

சுகாதாரம் கேள்விக்குறியான நிலையில், வடிகாலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விளார் சாலையின் குறுக்கே செல்லும் வடிகாலில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.