Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெய்வேலி வடபாதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை

ஒரத்தநாடு, அக்.16: பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவோணம் தெற்கு ஒன்றியம், நெய்வேலி வடபாதி கருப்பர் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெயில் மற்றும் மழை காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவர்கள் பெரும் பயன் அடைவார்கள். நிகழ்ச்சியில் திருவோணம் தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் சோம.கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், ஜாஹிர் உசேன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.