Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவையாறு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களின் வளர்ப்பு, மனநலம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

தஞ்சாவூர், அக்.16: திருவையாறு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம் சார்பில் பெற்றோர்களின் வளர்ப்பு, மனநலம் குறித்து மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை அனுசியா தலைமை வகித்தார்.

வழக்கறிஞர் முத்துராஜேஷ், புலவர் ராமலிங்கம், கேஎம்எஸ்எஸ்எஸ் பணியாளர் ஆலிஸ்மேரி, வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளர் மஞ்சுளா ஆகியோர் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள், பெற்றோர்களின் வளர்ப்பும் அவர்களின் மனநலம், நீதிமன்ற இலவச சட்டங்கள் குறித்தும் கருத்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் பல்நோக்கு சமூகப் பணி மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.