பேராவூரணி, அக்.16: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொளக்குடி ஊராட்சி பூலாங்கொல்லையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் சண்முகம், பேராவூரணி ஒன்றிய செயலாளர் சித்திரவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்,
சம்பளத்தை ரூ.700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநில குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சேகர், பெரியசாமி, மேகலா, முனீஸ்வரன், சின்னத்தம்பி, தமிழரசி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது


