Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக மக்கள் நன்மை பெற வேண்டி அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்

கும்பகோணம், மே 16: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட மடத்து தெருவில் அருள்பாலிக்கும் படைவெட்டி மாரியம்மன் கோயிலில், உலக மக்கள் நன்மை பெற வேண்டி அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் பல வண்ண மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவித்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து மாலையில் பகவத் படித்துறையில் இருந்து நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, பூ தட்டுகள் வரிசையாக எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின்னர் இன்னிசை கச்சேரியும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.