Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தஞ்சை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதற்காக அளவீடு செய்யும் பணி

தஞ்சாவூர், அக்.15: தஞ்சாவூர் மாநகராட்சியில் மாநில நிதிக்குழு நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதி 2026-27 திட்டத்தின் கீழ் பழுதடைந்த சாலைகள் சீரமைப்புக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 51 வரையிலான வார்டுகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள், மாநில நிதிக்குழு நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதி 2026-27 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை தார் சாலைகளாக இந்த திட்டத்தின் கீழ் சரி செய்யப்படும்.இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி மேற்பார்வையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சாலைகளை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அளவீடு செய்த பிறகு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.