Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பாபநாசம் அருகே பட்டுக்குடியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

தஞ்சாவூர், அக்.15: கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கு காலங்களில் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியாக பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி உள்ளது. இந்நிலையில், பருவமழை காலங்களில் ஆற்றில் அதிக நீர்வரத்து இருக்கும் சமயங்களில் பொது மக்கள் உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை போன்றவற்றை மேற்கொள்வது தொடர்பான பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி பட்டுகுடி கிராமத்தில் நடைபெற்றது.

பாபநாசம் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் அரசின் அனைத்து துறை அலுவலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.