Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மே 16,17 ஆகிய தேதிகளில் இணையவழி மின் கட்டணம் செலுத்த இயலாது

தஞ்சாவூர், மே 15: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் திருச்சி மற்றும் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை மின் பகிர்மான வட்டம் முழுவதும் இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் 16.5.2026 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 17.5.2026 ஞாயிறு நள்ளிரவு வரை இயங்காது. கட்டண கடைசி தேதி 16.5.2026 அன்று உள்ள நுகர்வோர்களின் வசதிக்காக, கட்டணம் செலுத்த கால அவகாசம் 18.5.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் அதற்கேற்ப திட்டமிடுமாறு தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் (பொ) கேட்டுக் கொண்டுள்ளார்.