Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சீருடை, புத்தகங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், மே 15: தஞ்சை மேம்பாலம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி அலுவலகத்தில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. 2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டப் பொருட்களில் பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலம், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2026-27ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.