Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்பகோணத்தில் பரபரப்பு ரயிலில் கடத்திய 20 கிலோ குட்கா பறிமுதல்

கும்பகோணம், அக்.14: கும்பகோணம் ரயில் நிலையத்தில் பனாரஸ்-கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலில் 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடைக்கு நேற்று காலை 11.30 மணியளவில் வந்த பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் விரைவு வண்டியில் கும்பகோணம் ரயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வண்டியின் பின்பக்க பொதுப்பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த சோதனையை கும்பகோணம் இருப்பு பாதை எஸ்.ஐ.செந்தில்வேலன், எஸ்எஸ்ஐ முத்துலட்சுமி, தலைமை காவலர்கள் வெங்கடேசன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்தினர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.