தஞ்சாவூர், அக்.14: தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் மருத்துவக்கல்லுரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, R.R.நகர், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், AVP அழகம்மாள் நகர்,
மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர் தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, மனோஜிபட்டி ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை மணி 9 முதல் மாலை 5 வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.


