Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர், பிப்.14: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியம், ஊதிய நிலுவை, ஊதிய நிர்ணயம், திருந்திய ஓய்வூதியம், சேமநல நிதி, மருத்துவ காப்பீடு வழங்க கோருதல் தொடர்பான 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், திருச்சி கருவூலம் மற்றும் கணக்குதுறை மண்டல இணை இயக்குநர் பாபு, தஞ்சாவூர் மாவட்ட கரூவூல அலுவலர். விஜயலெட்சுமி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கார்த்திக், சென்னை ஓய்வூதிய இயக்ககம், நிதித்துறை இயக்குநர் கூத்தீஸ்வரன், சென்னை மாநில கணக்காயர் அலுவலக (DAG) கணக்கு அலுவலர் விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.