திருக்காட்டுப்பள்ளி, நவ.13: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கருப்பூர் அம்பலகார தெருவை சேர்ந்தவர் குணா மனைவி சந்தியா (27). இவரது கணவர் வாழை இலை அறுக்கும் தொழிலாளி. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு 2 வயதில் நிவாஸ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சந்தியா தனது தாயாரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், திருக்காட்டுப்பள்ளி காவிரி புதுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்கள் அப்பெண்ணை காப்பாற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
