டெல்லி கார் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு கும்பகோணம் மகாமக குளக்கரையில் இந்து மக்கள் கட்சி பிரார்த்தனை
கும்பகோணம், நவ.13: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேசன் அருகே கார் குண்டு வெடித்து 13க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில், பல்வேறு நபர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தீவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மதரசாக்கள், பள்ளிவாசல்கள் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையவும் கும்பகோணம் மகாமககுளக்கரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் லோகசெல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பாலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் தவத்திரு சுந்தர்ராஜ சுவாமிகள், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
