Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பட்டுக்கோட்டை, ஜூன் 13: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி இளையராஜா தனது சொந்த நிதியிலிருந்து நோட்டு, பேனா, பென்சில், ஜாமன்ட்ரி பாக்ஸ் அடங்கிய ஸ்கூல் பேக்குகளை வழங்கினார்.

அப்போது டிஎஸ்பி இளையராஜா மாணவர்கள் மத்தியில் பேசுகையில்; மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் போன்ற உயர்ந்த நிலையை அடைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார்.