Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி

தஞ்சாவூர், பிப்.13: பாபநாசம் அருகே அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசின் விலையில்லா மடிக்கணினியை மாணவர்களுக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு 418 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிகணினியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் அய்யாராசு, துரைமுருகன் ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், நகர செயலாளர் கபிலன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குனர் சுவாமிநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் கல்லூரி ஆசிரியர் ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.