கும்பகோணம், செப்.11: தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கோவி.செழியன் மற்றும் முன்னாள் எம்.பி.ராமலிங்கம் ஆகியோர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 10 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் துக்காச்சி செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


