Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பேராவூரணி, செப்.11: பேராவூரணி ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் நெல் சாகுபடியில் மீத்தேன் உமிழ்தலை குறைத்து, கார்பனை மண்ணில் நிலை நிறுத்துதல் தொடர்பான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது . பயிற்சி முகாமிற்க்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராணி தலைமை வகித்து பேசுகையில்; தொழு உரங்கள் கம்போஸ்ட், வெர்மிகம் போஸ்ட், பசுந்தாள் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் கார்பன் நிலை நிறுத்துதல் மண்ணில் நடைபெறுவது குறித்து தொழில்நுட்பங்களை விளக்கி பேசினார்.

ஈச்சங்கோட்டை சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரியின் மண்ணியல் பேராசிரியர் மோகன்தாஸ் பேசுகையில்; நேரடி நெல் விதைப்பு முறைகள், காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் நீர் பாய்ச்சுதல், திருந்திய நெல் சாகுபடி முறைகள், பசுந்தாள் உரங்கள், பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதன் அவசியம், திரவ உயிர் உரங்கள், அங்கக உரங்கள் மூலம் கார்பன் மண்ணில் நிலை நிறுத்துதல் குறித்தும் பேசினார். பயிற்சியில் களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சாகித்யா வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி நன்றி கூறினார்.