Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கும்பகோணத்தில் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடிய தவெகவினர்

கும்பகோணம், அக்.10:இடைத்தேர்தலில் தவெக வெற்றியை முன்னிட்டு கும்பகோணத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை கும்பகோணத்தில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட தவெக சார்பாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரில் மாவட்ட பொருளாளர் விஜய்சந்திரன் தலைமையில், கும்பகோணம் மாநகர செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.