பேராவூரணி, அக்.10: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் இன்று (10ம் தேதி) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தகுதி பெற்ற இளம் வாக்காளர்களை பதிவு செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின்படி இந்த முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது.


