Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சி

ஒரத்தநாடு, அக்.10: ஒரத்தநாடு அரசு கல்வியில் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட புத்தாகக்க பயிற்சி விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு கல்வியில் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட புத்தாக்கப் பயிற்சி வகுப்பு கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் சுவாமிநாதன் கலந்து கொண்டு நலம் தரும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முனைவர் கொளஞ்சி வரவேற்புரையாற்றினார். முதலாம் ஆண்டு பயிற்சி மாணவர் கண்ணன் நன்றி கூறினார். விழாவில் மாணவர் துணைத் தலைவி கனிமொழி தொகுத்து வழங்கினார்.